Friday, August 10, 2018

Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 98843 80229
www.supremeholisticinstitute.com
TANTRA-தந்திரம்
-------------------------------------------------------------
SEVEN CHAKRAS सात चक्र ஏழு சக்கரங்கள் :
-------------------------------------------------------------
} பூரண மாலை -^- பட்டினத்தார் {
POORANA MALAI - PATTINATHAAR

குறள் வெண்செந்துறை 
}KURAL VENSENTHURAI{

1.மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!

2. உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!

3. நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!

4. உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!

5. விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!

6. நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!

7. நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!

8. உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!

9. மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே!

10. இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே!

11. ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!

12. மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே!

(இடையில் 13 முதல் 99 வரை மேலும் 87 பாடல்கள் உள்ளன)

100. நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே!

101. முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே!

102. பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே!
பூரண மாலை - பட்டினத்தார் : குறள் வெண்செந்துறை

--------------------------------------------
ஆதாரங்கள் 7 சிறு விளக்கம் :
--------------------------------------------

1 . மூலாதாரம் :
- குதத்துக்கும் குய்யத்துக்கும் மத்தியில் - திரிகோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் ,தேவி வல்லபை.

2 . சுவாதிஷ்டானம் :
- முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி.

3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி

4 . அனாஹதம் :
- ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி.

5 . விசுத்தி :
- கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.

6 . ஆக்ஞா :
- முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம்,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி.

7. சகஸ்ராரம்(ஸஹஸ்ர பத்மம்) :
- சிரசில் உள்ள குவிந்த 1000 இதழ் தாமரை (மூளைப் பகுதி)
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பரப்ரஹ்மம், தேவி பராசக்தி.

படம் :ஆதாரங்கள் 7

No comments:

Post a Comment