Friday, August 10, 2018

LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
-------------------------------------------------------
ௐ எனச்சொன்னால் என்ன ஆகும் ?
-------------------------------------------------------
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும்.
-பிருகு முனிவர் .

முதலில் "அம்" என்று செபம் செய்து, பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்", "ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாகச் செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .

இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.

முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா
மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.

உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:"
என்று உச்சரிக்கலாம் .

"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.

"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....

ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்

மந்திரங்களோ எழுகோடி & நாமிருப்பதோ ஊர்க்கோடி !

"மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னும் அவர்
இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து"
என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று.

எழுகோடி என்றால்...... ! ?
ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல.
ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருள்.

1 - நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
2 - சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
3 - சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.
4 - பட் - விக்கினங்களைத் துரத்துவது.
5 - ஹூம்பட் - காமாதிகளைப் போக்குவது.
6 - வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
7 - வஷட் - தேவதைகளை வசம் செய்வது.

Transliteration & Translation :

1 - Namahā - aisvaryam aḷippatu.
2 - Cuvāhā - tēvataikaḷait tirupti ceyvatu.
3 - Cuvatā - tairiyam, vacīkaram koṭuppatu.
4 - Paṭ - vikkiṉaṅkaḷait turattuvatu.
5 - Hūmpaṭ - kāmātikaḷaip pōkkuvatu.
6 - Vauṣaṭ - tēvataikaḷai iḻuppatu.
7 - Vaṣaṭ - tēvataikaḷai vaca ceyvatu

1 - Namah - providing prosperity.
2 - cuvaha - to satisfy the devatas
3 - cuvata - courage, to charm.
4 - Pat - chasing impediments.
5 - humpat - relieving conjugal desires.
6 - vausat - attracting devatas.
7 - vasat - bringing devatas under the fold .

திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள்
ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்

மந்திரங்கள்:
நமஹா விநாயகா
சுவாஹா விநாயகா
சுவதா விநாயகா
பட் விநாயகா
உம்பட் விநாயகா
வௌஷட் விநாயகா
வஷட் விநாயகா

படம் : ஒம்கார வடிவம்
Shiva Raja yogi Dr.Suresh Raju
Cell:+91 98843 80229

No comments:

Post a Comment