Friday, August 10, 2018

#வேள்விதானம்தவம்

தேவர்கள் பிராமணர் கள்
குருமார்கள் ஞானிகள்
இவர்களை போற்றுவதும்
தூய்மை நேர்மை பிரம்மச்சரியம்
கொல்லாமை இவைகள் உடலால்
செய்யப்படுவதும் #தவமெனப்படும்.

பிறர்மனத்தைப் புண்படுத்தாத தும்
உண்மையானதும் இனிமையானதும்
நன்மையளிப்பதுமான வார்த்தை களைப்
பேசுவது  வேதம் ஓதுவது ஆகியவை
வாக்கினால் செய்யப்படுவதும்
                     #தவமாகும்.

மன அமைதி மகிழ்ச்சி மெளனம்
மன அடக்கம் தூய எண்ணம் இவை
                    #மனத்தவம்மாகும்.

இந்த முன்று வகைத் தவங்களையும்
பயனைக் கருதாமல் ஈடுபாட்டுடன்
செய்துவந்தால் அது #சாத்வீகமானதவம்
எனப்படும்.

சொந்த நலனுக்காக வும்
பெருமைக்காகவும் போற்றுதலுக்காகவும்
செய்யப்படும் பகட்டுத்தவம்
#ராஜஸதவமாகும்.அதுஉறுதியற்றது
நீடிக்காது.

அறியாமையினால் தம்மைவருத்தித்கொண்டோ அல்லது
பிறரைத் துன்புறுத்தி யோ செய்யப்படுகின்ற தவம் #தாமஸதவம்
எனப்படும்.

தக்க இடத்தில் காலம் அறிந்து
தன்கடமையெனக்கருதி
பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல்
#பாத்திரமறிந்து தானம் செய்வது
          #ஸாத்விகதானம் ஆகும்.

கைமாறு கருதி அல்லது பலனைகருதி
அல்லது வருத்தத்துடன் கொடுத்தாலும்
அது #ராஜஸதானம் ஆகும்.

தகாத காலத்தில் தகுதியற்றவர்களுக்கு
தகாத இடத்தில் தானம் கொடுப்பதும்
மரியாதை இன்றியோ இகழ்ச்சியுடனோ
கொடுக்கப்படும் தானமும்
       #தாமஸதானம் எனப்படும்.

பிரம்மம்  "ஓம்"
                 
                  "தத்"

                  "ஸத்"
என்று முன்று பெயர்களைக் கொண்டது.
அதனால் பிராம்மணங்கள். வேதங்கள்
வேள்வி களும் வகுக்கப்பட்டன.

வேதம் அறிந்தவர்கள் வேதவிதிப்படி
செய்யும் வேள்வி.
#தானம்
#தவம் இவற்றைச் செய்யும்பொழுது
  #ஓம் என்று சொல்லி தான்
தொடங்கவேண்டும்.

பலனைவிரும்பமால் #வீடுபேற்றை
விரும்புபவர்கள் செய்யும் வேள்வி
தானம் தவம் இவற்றை #தத்
என்று சொல்லி தொடங்கவேண்டும்.

"ஸத்" என்ற சொல் உண்மை என்ற
பொருளிலும் நன்மை என்ற பொருளிலும்
உச்சரிக்கப்படுகிறது.
மங்கல காரியங்களிலும். #ஸத் என்றசொல் பயன்படுத்தப்படுகிறது.

வேள்வி தவம் தானம் இவற்றின்
நிலைத்த தன்மையை யும் #ஸத்
என்று சொல்லப்படுகிறது
சிரத்தையின்றி செய்யப்படும்
வேள்வி  கொடுக்கப்படும் தானம்
பின்பற்றப்படும் தவம் முதலிய
செயல்கள் #அஸத் எனப்படும்.
#அஸத்
காரியங்களுக்காக பலம்
இம்மையிலும் ஏற்படாது.
மறுமையிலும் ஏற்படாது.

சிவ சிவ

No comments:

Post a Comment