Friday, August 10, 2018

LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
-----------------------------------------------------
WORLD of SOUNDS - "சப்த - ப்ரபஞ்சம்" :
-----------------------------------------------------
'Aa + Uu + Ma ' > "OM" < (((ॐ))) > "ஓம்" < ' அ + உ + ம '
ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations.
Scientifically it's known as the sound of 'big bang' (பிரணவம்)

World of Sounds : World of Sounds Sound and its properties

What produces sound? : What produces sound? Some objects produce sounds when they move. For example when we pluck a string on a guitar, it produces a sound. The movement of a string is called vibration. When objects vibrate they produce sound. For example if we touch them, hit them, bump into them or if they fall into the floor.

How do we perceive sounds? 1 Outer ear:The outer ear is the part you see when you look in the mirror. The outer ear catches the sound travelling in the air. It then moves the sound to the part of the ear inside the head. 2 Eardrum: Sound travels from the outer ear to the eardrum. The eardrum is the thin, skin like layer that covers the middle part of the ear. When sound hits the eardrum, the eardrum begins to vibrate 3 Three tiny bones (hammer, anvil, stirrup): The vibrating eardrum makes the three tiny bones in the middle ear vibrate. 4 Part shaped like a shell (cochlea): It is filled with liquid. The vibrating bones cause the liquid to vibrate. 5 Nerve to the brain: The liquid carries the sound vibrations to a special nerve. This nerve carries messages to the brain. The brain helps you understand the sound you hear.

Types of Sound : Types of Sound There are many different sounds. For example the sound of a sneeze is very different from the sound of an applause. Sounds are different from one another in their tone and intensity. Depending on their intensity sounds can be loud or soft. Loud sounds like the honk of a truck’s horn, are intense, they have a high volume. Soft sounds, like the pages of a book turning have low intensity and a low volume.

Depending on the tone sounds can be sharp or low. The sound of a doorbell is sharp, the sound of a drum is usually low. The tone (sharp or low) depends on how fast the object vibrates. The faster an objects vibrates, the sharper the sound will be and vice versa.

Materials and sounds : Materials and sounds Sound does not always propagate at the same speed. For example, it propagates much faster in water than in air, this is because water conducts sounds much better than air. There are materials that conduct sound very well like metals. Other materials do not conduct sound well, like cork. They are used as sound insulators.

Sound propagates… : Sound propagates… Sound propagates in all directions. As a result we can hear a radio that is turned on in one room of the house in all the other rooms. Sound propagates at great speed. As a result, we hear the sound of a train before it passes us.

What’s the difference between sound and noise? Sounds: produce regular sound waves,harmonic, pleasant to the ear. Noise: produces irregular sound waves, unpleasant and disturbing to our ears.

A decibel meter helps us know how loud and dangerous a sound can be for human ears. Loud sounds are a form of pollution called sonic pollution. How can we measure the intensity of a sound? The intensity of a sound is expressed in decibels (dB).

How loud can sounds be? Threshold of pain: decibel level at which a person can become deaf by having his/her eardrums explode.

Partially deaf people use hearing aids to help them perceive sounds better, they use a device that amplifies sounds People who are completely deaf use sign-language to communicate with others What about people who are totally or partially deaf?

How do we use sounds? : How do we use sounds? We communicate through sound, the telephone transmits our voice to people who are far away. We can also use sound to emphasize situations or actions, like in movies (specially horror movies!!).

We also use instruments to make music. There are 3 principal kinds or types of instruments: String instruments

Percussion Instruments Percussion instruments produce sounds because they vibrate when you strike them. Drums and cymbals are percussion instruments.

Wind instruments Wind instruments produce sounds when we blow them because the air inside them vibrates. French horns and oboes are wind instruments.
---------------------------------------------------------------------------
NADA BINDU UPANISHAD(((ௐ))) நாதபிந்து உபநிடதம் !
---------------------------------------------------------------------------
Om ! May my speech be based on (i.e. accord with) the mind;
May my mind be based on speech.
O Self-effulgent One, reveal Thyself to me.
May you both (speech and mind) be the carriers of the Veda to me.
May not all that I have heard depart from me.
I shall join together (i.e. obliterate the difference of) day
And night through this study.
I shall utter what is verbally true;
I shall utter what is mentally true.
May that (Brahman) protect me;
May That protect the speaker (i.e.the teacher), protect me;
May that protect the speaker-may That protect the speaker.
Om Shanti ! Shanti ! Shanti !

வேத சப்தம், வேத சப்தம் என்ற சப்தத்துக்கு முக்கியத்துவம் தருவதுதானே புரிபடாமல் இருக்கிறது?
 சரி, சப்தம் என்பது எப்படி உண்டாகிறது?
எங்கே ஒரு அதிர்வு (vibration) சலனம் ( movement , motion ) இருந்தாலும் அங்கே சப்தம் உண்டாகி விடுகிறது.
இது பகுத்தறிவு சாஸ்திரமான ஸயன்ஸே சொல்கிற விஷயம். தொனியில் சில விதமான சலனங்களை உண்டாக்கிப்
பல தினுசான பேச்சுச் சப்தங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.

சப்தங்கள் காதுக்குக் கேட்கிறவையாகவே தோன்றுகின்றன. ஆனால் சிலவற்றைக் காதுக்குக் கேட்க முடியாத மின்சார அலைகளாக மாற்ற முடியும் என்று ரேடியோ, டெலிபோன் முதலியவற்றைப் பார்த்தால் தெரிகிறது. நாம் பார்ப்பது, கேட்பது எல்லாமே இந்த மின்சார அலைகள்தான்; பார்க்கிறவனும் கேட்கிறவனும், அவனுடைய மூளையும்கூடத்தான் என்று சொல்கிற அளவுக்கு ஸயன்ஸ் கொண்டுவந்துவிட்டது. இது இருக்கட்டும்.

லோகத்தில் இத்தனை கோடி ஜட வஸ்துகள் மலையும், பூமியும், ஆறும், சமுத்திரமும் உண்டாயிருக்கின்றன. ஜீவராசிகள் விதவிதமாக உண்டாயிருக்கின்றன. இத்தனையும் எதிலிருந்தோதான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஏதோ ஒன்று இப்படி சிருஷ்டிக்கிறபோது பல தினுசாக அசைந்து கொடுத்து, எத்தனையோ சலனங்களின் மீதுதான் இத்தனையும் தோன்றியிருக்க வேண்டும். சலனத்துக்கெல்லாம் சப்தம் உண்டு என்றால், சிருஷ்டி முழுவதற்கும் முந்திப் பலவித சப்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். இந்த சிருஷ்டியில் ஒன்றுக்கொன்று வாழ்வளித்துக் கொள்கிறது. இப்படிப் பரஸ்பரம் போஷித்துக் கொள்கிறபோது பலவிதமான சலனங்கள் அல்லது சப்தங்கள் உண்டாக்கத்தான் வேண்டும். ஸ்தூலமான காரியங்களில்தான் சலனம் இருக்கிறதென்று இல்லை. நாம் நினைக்கிறதும்கூட ஒருவிதமான மின்சார கரெண்டின் ஓட்டம்தான் என்று ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் நம்முடைய எண்ணம் ஒவ்வொன்றுக்கும்கூட ஒரு சலனமும் ஆனபடியால் சப்தமும் இருந்தாக வேண்டும். இந்த சப்தங்கள் ரொம்ப ரொம்ப சூக்ஷ்மமாக இருப்பதால் நம் காதுகளுக்குக் கேட்கவில்லை. பாக்டீரியா கிருமி நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மைக்ராஸ்கோப்பினால் பார்த்தால் அது தெரிகிறது. அப்படியே நம் காதுகளுக்குக் கேட்காத சூக்ஷ்ம சப்தங்கள் நிறைய இருக்கின்றன. பௌதிகமாகவோ (Physical), மானஸிகமாகவோ (Mental) ஒரு அசைவு என்று வந்துவிட்டால் அங்கே ஸயன்ஸ்படி சப்தமும் உண்டாகித்தான் ஆகவேண்டும்.

ஒவ்வொரு அசைவுக்கும் தனியாக ஒவ்வொரு சப்தம் இருக்கிறது. இதையே மாற்றிச் சொல்வதானால், ஒவ்வொரு விதமான சப்தத்தை உண்டாக்க வேண்டுமானால், அதற்கு ஒரு விதமான அசைவை உண்டாக்கித்தான் ஆக வேண்டும். ஒரு வித்வான் பாடுகிறார். அவர் பாடுகிற மாதிரியே நாம் பாட வேண்டும். அதே மாதிரியே புரட்ட வேண்டும் என்றால், அவர் தொண்டையில் என்னென்ன சலனங்களை உண்டாக்குகிறாரோ அவற்றையே நாமும் பண்ணித்தான் வேண்டும்.

சப்தமும் அசைவும் சேர்ந்து சேர்ந்தே, ஒன்றாகவே உண்டாகின்றன. இப்படி உண்டான அப்புறம் அந்த அசைவுகளிலிருந்து ஒரு ஸ்தூலமான வஸ்து அல்லது மனோபாவம் உண்டாகிறது. ஆகக்கூடி சப்தத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுகிறது. இந்தப் பிராசீனமான தத்துவம் ஸயன்ஸ் பகுத்தரிவுப்படியும் கூட சரியானதுதான் என்று தெரிகிறது.

சிருஷ்டி, அதிலே நடக்கிற பல காரியங்கள் எண்ணங்கள் இவற்றின் மூலமாக சப்தங்கள் ஆகாசத்தில் (Space) அப்படியே நிறைந்துதான் இருக்கின்றன. நாம் கையைத் தட்டினவுடன் ஒரு சப்தம் உண்டாகிறது என்றால் அது என்ன ஆகிறது? அது அப்படியே ஆகாசத்தில்தான் தங்கி விடுகிறது. நல்ல காரியங்கள், கெட்ட காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு சலனம், சப்தம் இருக்கிறது. இந்த சப்தத்தை உண்டாக்கி விட்டால் அந்த நல்லது அல்லது கெட்டதும் வந்துதான் ஆக வேண்டும். நல்லெண்ணங்கள் ஜனங்களுக்கு உண்டாகிறது என்றால் அப்படி உண்டாக்குகிற சலனங்கள் இருக்க வேண்டும்; அவற்றிற்கான சப்தங்கள் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் லோகத்தில் ஜனங்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஜனங்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் இருப்பதைவிட லோகத்துக்குப் பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது? அப்படி எண்ணுவதற்கு அவர்களைத் தூண்டுகிற சக்தியைப் பெற்ற சப்தங்கள்தான் வேத மந்த்ரங்கள்.

அது மட்டுமில்லை. ஜனங்கள் ஜீவிப்பதற்கு ஆகாரம் அவசியம். ஆகாரத்துக்கு மழை அவசியம். லோகத்தில் ஒரு மேகம் உண்டாகிறது. அது மழையாகப் பெய்கிறது என்றால், இந்தக் காரியங்கள் அநேக விதமான சலனங்களின் மீதே நடந்திருக்கிறது. எனவே, சில சப்தங்களை உண்டாக்கி அதன் மூலம் இப்படிப்பட்ட சலனங்களை ஏற்படுத்தி விட்டால் மழை பெய்யத்தான் வேண்டும். இப்படியே வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம், நல்லவற்றையெல்லாம் சப்தங்கள் மூலம் உண்டாக்கிக் கொள்ளலாம். அநாவசியமானவை, கெட்டவை இவைகளையும் சிற்சில சப்தங்களால் பண்ணிக் கொள்ளலாம்தான். ஆனால், வேதத்தில் இருக்கப்பட்ட சப்தங்கள் லோக க்ஷேமார்த்தம் ஒன்றையே குறிக்கோளாக உடையவை.

கடைசியில் பார்க்கும்போது, இப்படி சலனம், சப்தம் உண்டாகிறது என்றால் அதுவும் என்னவோ தானாக ஏற்பட்டதா? இல்லை. தானாகப் பலவித சலனங்கள் ஏற்பட்டால் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் கோணாமாணா என்றுதானே இருக்கும்? ஆனால் பிரபஞ்சத்தில் எத்தனை கிரமமும், ஒழுங்கும், பரஸ்பர சம்பந்தமும் இருக்கிறது? இதைப் பார்த்ததில் ஒரு பேரறிவுதான் திட்டம் போட்டு இப்படி எல்லாம் அசைந்து கொடுத்து சிருஷ்டியை உண்டாக்கியிருக்கிறது என்று தெரிகிறது. அந்த அறிவின் அசைவில் ஏற்பட்ட சப்தங்களைத்தான் வேதம் என்பது. வேத மந்த்ரங்கள் சாட்சாத் பரமாத்மாவிடம் உண்டானவை என்பது இதனால்தான். அப்படிப்பட்ட சப்தங்களை இப்போதும் நாம் ரக்ஷித்து லோகத்துக்கு நல்லது செய்ய வேண்டும். இப்படிப்பட்ட லோகக்ஷேமார்த்தமான சப்தக் கோவைகள்தான் வேத மந்த்ரங்கள்.

'அதெப்படி? வேத மந்த்ரங்கள் நம் காதுக்கே நன்றாகக் கேட்கின்றன. சிருஷ்டியில், பிரபஞ்சம் வெளி (space) யில் உண்டாகிற சப்தங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையே. அதுவும் இதுவும் ஒன்று என்றால் எப்படி?' என்ற கேள்வி தோன்றுகிறது.

பிரபஞ்சத்தில் இருக்கிறதெல்லாம் ஜீவனிடமும் இருக்கிறது. "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்". இதனால் மந்திர சப்தங்களை ஸ்வரம் தப்பாமல் எழுப்புவதால் ஒரு ஜீவ சரீரத்தில் ஏற்படும் நாடி சலனங்களைக் கொண்டே ஆகாச வெளியில் லோக க்ஷேமார்த்தமான சலனங்களைப் பிடித்துக் கொடுத்துவிடலாம். இது அறிவுக்கு ஒத்துக் கொள்ள முடியாததாக தோன்றலாம். ஆனால், அண்டத்தில் உள்ள பல சமாசாரங்களைக் கிரகித்துக் கொள்வதற்கு இந்த மனித பிண்டத்தில் கருவிகள் (இந்திரியங்கள்) இருக்கின்றன என்பது நாஸ்திகர் உள்பட எல்லோரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். அண்டத்திலே ஒரு சூரியன் இருந்தால், அதனுடைய உஷ்ணத்தை நம் தேகம் தெரிந்து கொள்கிறது. வெளியிலே ஒரு பூ இருந்தால், அதனுடைய வாசனை இங்கே நம் மூக்குக்குத் தெரிகிறது. வெளியில் கரும்பு என்று ஒன்று இருந்தால் அதன் ருசியைத் தெரிந்து கொள்ள இங்கே வாய் இருக்கிறது. ஒன்று சிவப்பாய் இருக்கிறது, இன்னொன்று மஞ்சளாக இருக்கிறது என்று நம் கண் தெரிந்து கொள்கிறது. ஒரே சரக்கு அண்டத்தையும் பிண்டத்தையும் பண்ணியிருந்தாலொழிய இதில் ஒன்று இன்னொன்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, அதிலிருந்தே வாழ்க்கையை நடத்திக் கொள்ளவோ முடியாது. இன்னும் ஒரு படி மேலே போனால் ஒரே சரக்குதான் அண்டத்தைப் பண்ணிற்று, பிண்டத்தைப் பண்ணிற்று என்று மட்டுமின்றி, அதுவேதான் அண்டமும் ஆகிறது பிண்டமும் ஆகிறது என்று தெரியும். யோகிகள் இதைப் பிரத்யக்ஷமாக அறிந்திருக்கிறார்கள். "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்று அப்போது நிதர்சனமாகத் தெரியும்.

அகண்ட ஆகாசத்தில் என்னென்ன இருக்கின்றனவோ அதெல்லாம் ஜீவனிடமும் இருக்கின்றன. மனுஷ்ய சரீரத்தில் அவையெல்லாம் இந்த ஜீவனுடைய இந்திரியங்களுக்கு எட்டுகிற மாதிரி வேறுவிதமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவன் தொண்டையிலே ஒரு விதமான சப்தங்களை உண்டாக்குகின்றான் என்றால், ஆகாசத்திலும் அதற்கு மூலமாக நம் காதுகளுக்குக் கேட்க முடியாததாக சில வித சப்தங்கள் இருக்கின்றன. ரேடியோ மின்சார அலையை கிரகித்து சப்த அலையாக மாற்றுகிறதுபோல், இவனும் அந்த ஆகாசசப்தங்களைக் கிரகித்து அவற்றை ஜீவனுடைய இந்திரியங்களுக்கு, காதுக்கு, கேட்கக்கூடிய சப்தங்களாக மாற்றித்தர முடியுமானால் லோகக்ஷேமத்திற்கு என்ன வேண்டுமோ அதை சப்தத்தாலேயே சாதித்துக் கொண்டு விடலாம். இதைப் பண்ணிக் கொடுக்கிற ஸயன்ஸ்தான் யோகம். நாடி சலனங்களால் தன்னொருத்தனுக்குத் சித்த சுத்தியை உண்டாக்கித் தருகிற அதே யோகம், ரேடியோவில் இன்ன இடத்தில் முள்ளைத் திருப்பினால் இன்ன ஸ்டேஷனில் பாட்டைப் பிடிப்பது போல், இன்னின்ன விதமான சப்தங்களின் நாடி சலனத்தால் இன்னின்ன லோக க்ஷேமார்த்தமான விச்வ சக்திகளை ஆகர்ஷிப்பதற்கும் வழி செய்கிறது. யோக சாதனை மூலமாக அண்டத்திலிருப்பதை எல்லாம் பிண்டத்தில் தெரிந்து கொண்டு, பிண்டத்துக்குக் கொண்டு வரவும் முடிகிறது.

இப்படி நான் சொல்வதற்கு அறிவுக்கு ஏற்றுக் கொள்கிற மாதிரி, யுக்திக்குப் பொருந்துகிற மாதிரி நிரூபணம் (proof) தரவேண்டுமென்று கேட்டால் முடியாத காரியம். நாம் இருக்கிற ஸ்திதியில் இந்த மனுஷ்ய யுக்திக்கு மேற்பட்ட நிலையில் இருக்கிறது தான் யோகம். நம்முடைய அல்ப மனசின் யுக்திக்கு அப்பாற்பட்டவற்றைச் சொல்வதற்காக இருப்பதே வேதம். இப்படியிருக்க, யுக்திக்கு அதீதமானதை ஏற்றுக் கொள்வதற்கு யுக்தி மூலமே ப்ரூஃப் காட்டுங்கள் என்றால் அது அசம்பாவிதம். பெரியவர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு. யோக சாஸ்திர விதிகளைகத் தவறாமல் அவரவரும் கடைப்பிடித்தால்தானே உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். கேள்வி கேட்கிற எல்லோரும் இப்படி யோக சாதனை செய்வார்கள் என்பது நிச்சயமாக நடக்கிற காரியம் இல்லை. அல்லது ஒரு உண்மை யோகியின் சக்தியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும், அவர் உண்மை யோகிதான் என்று முதலில் எப்படி நம்ப வைப்பது? அவர் செய்கிற காரியம் ஏமாற்று வித்தை இல்லை என்று எப்படி நம்ப வைப்பது? ஆகக்கூடி எங்கேயோ ஓரிடத்தில் நம்பிக்கை என்று ஒன்று வந்துதான் ஆகவேண்டும். அப்புறம் அநுமானங்கள், சொந்த சாதனை, அதிலிருந்து வரும் அநுபவம் எல்லாம் நம்பிக்கையைக் கெட்டிப்படுத்தி இது சத்தியம்தான் என்று உறுதி தருகின்றன. நம்பவும் மாட்டேன், நானும் செய்து பார்க்க மாட்டேன் என்பவனிடம் ஒன்றும் செய்து கொள்வதற்கில்லை.

'அண்டத்தையும் பிண்டத்தையும் ஒன்றாக இணைத்துக் காணக்கூடிய ஒரு நிலை உண்டு. அதை அடைந்தவர்கள் உண்டு. அவர்களால் இதில் ஒன்றில் சூக்ஷ்மமாக இருப்பதை இன்னொன்றில் ஸ்தூலமாக மாற்றிக் கொடுக்க முடியும்' என்று நம்பக்கூடியவர்களுக்குத்தான் சொல்கிறேன்.

எத்தனையோ கிரமத்துடன் இயங்கிவரும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் போது இதையெல்லாம் செய்கிற பேறறிவு ஒன்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் பரமாத்மாவிடம்தான் நாம் பார்க்கிற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும் உண்டாயிருக்கின்றன. முதலில் சப்தப் பிரபஞ்சம் ஆகாயத்தில் உண்டான பின்தான் நாம் கண்களால் பார்க்கிற பிரபஞ்சம் உண்டாயிற்று. ஆகாயத்தில் இந்த சப்தங்கள் அனைத்தும் இருக்கின்றன. வெளிப் பிரபஞ்சத்திலிருப்பதெல்லாம் மனிதனின் உடல் இருக்கின்றன. வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இருதயத்திலும் இருக்கிறது. யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகாசத்தை அநுபவிக்கிறார்கள். அப்போது உள், வெளி என்ற பேதம் நீங்கி, சகலமும் ஒன்றாகி விடுகின்றன. இதய ஆகாசமும் வெளி ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன. இந்த நிலையில் யோகிகளுக்கு ஆகாசத்திலுள்ள சப்தங்களைக் கிரகித்து லோகத்துக்குத் தர முடிகிறது. லோக க்ஷேமார்த்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும். இவற்றை யாரும் உண்டாக்கவில்லை. ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியன் பேரில் இருந்தாலும், உண்மையில் அந்த ரிஷி அந்த மந்திரத்தை இயற்றவில்லை. ஒரு மந்திரத்துக்கு இன்னார் ரிஷி என்கிறபோது, ஆகாசத்தில் அநாதியாக உள்ள அந்த ரிஷியே முதலில் கண்டு கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம். 'ரிஷி' என்றால் 'மந்த்ர த்ரஷ்டா' (மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்) என்றுதான் அர்த்தம் சொல்லியிருக்கிறது. 'மந்த்ரகர்த்தா' (மந்த்ரத்தைச் செய்தவர்) என்றல்ல. நம் உடம்புக்குள் சுவாஸம் பலவிதமாக அசைந்து கொடுத்தே நம் வாழ்க்கை நடப்பதுபோல், இந்த சப்த அசைவுகளாலேயே பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால் பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்கள். எனவே, இவையன்றி பரமாத்மா இல்லை. அதாவது, பரமாத்மாவைப் போலவே இவையும் அநாதியானவை.

இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால், அர்த்தம் இல்லாமல் வெறும் சப்த ரூபத்திலேயே அவை லோக க்ஷேமத்தைச் செய்கின்றன. ஆனால் இதுமட்டுமில்லை. அவற்றுக்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும் பரம தாத்பரியமாக, ஒரே சத்தியம்தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது என்று சொல்கின்றன. இது தவிர அவை சப்தங்களாக இருக்கிறபோதே அந்தந்த சப்தத்துக்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்த தேவதையின் சாக்ஷாத்காரத்தையும் அநுக்கிரகத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.

சப்தம் தானாகப் பலனைத் தரவில்லை. சகல பலனையும் தருகிற பலதாதா ஈசுவரன்தான். அப்படியிருந்தும், அவனே நேராக ஒவ்வொரு பலனையும் தராமல், ராஜா (ராஷ்டிரபதி) பல அதிகாரிகளை வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்துவதுபோல், ஒவ்வொரு பலனைத் தரும் அதிகாரிகளாக ஒவ்வொரு தேவதையை வைத்திருக்கிறான். அந்த தேவதையின் சப்த ரூபமே அதற்கான மந்திரம். சப்த ரூபமான மந்திரத்தை உருவேற்றி ஸித்தியடைந்தால் தேவதையின் அவயவங்கள் கொண்ட ரூபத்தையும் கண்ணால் காணலாம். இப்படி உள்ள தேவதா சரீரத்துக்கு, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி அக்கினியில் ஆஹுதி செய்தால் அதுவே ஆகாரமும் ஆகிறது.

இவ்விதம் யக்ஞம் செய்தால் அந்த தேவதைகள் விசேஷமாகப் பலனைத் தருகின்றன. நாம், வரியை நேரே ராஜாவுக்கா (ராஷ்ட்ரபதிக்கா) செலுத்துகிறோம்! அதிகாரிகளுக்குத் தானே செலுத்துகிறோம்! அது மாதிரி, பரமாத்மாவின் சிப்பந்திகளாக லோக க்ஷேமமான பயன்களைத் தருகிற தேவதைகளுக்கு வேத அத்யயனத்தாலும், யக்ஞத்தாலும் வரி செலுத்துகிறோம். வேத சப்தங்கள் அவர்களுடைய ஸ்வரூபமாகவே இருப்பதுதான் அவற்றின் பெருமை. வேத அத்யயனமானது நம் நாட்டுக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷம், சாந்தி முதலியவற்றைத் தரும் பிரபஞ்ச சக்திகளின் அநுக்கிரகத்தை வாங்கிக் கொடுக்கிறது.

காவிய திருஷ்டியில் (literary point of view) பார்த்தாலே, "வேதம் நாகரீகம் தெரியாத பழங்குடிகளின் வார்த்தையாக இல்லை. அதில் அத்தனை ரஸங்களும் இருக்கின்றன" என்று பல மேல் நாட்டுக்காரர்களே கொண்டாடுகிறார்கள். இதற்கு மேலே அது பல தேவதைகளின் தரிசனத்தையும் அநுக்கிரகத்தையும் செய்து வைக்கிறது. அதற்குமேல், முக்கியமாக உபநிஷதங்களில், பரம ஞானமான ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கிறது. இப்படிப்பட்ட அர்த்த கெளரவம் வேதத்துக்கு இருந்தாலும் அதைவிடக் குறைந்ததில்லை அதன் சப்த கெளரவம். இன்னும் சொல்லப்போனால், சப்தமே தனிப்பட்ட சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. வேத மந்திரங்கள்தான் என்றில்லை, எந்த மந்திரத்துக்குமே பொதுவான உண்மை இது.

பல மந்திரங்களில் அர்த்தத்தைவிடக்கூட சப்தத்துக்கு முக்கியத்துவம் அதிகம்! அவற்றின் அக்ஷரத்துக்கும் அவற்றைச் சொல்ல வேண்டிய ஸ்வரத்துக்குமே விசேஷ சக்தி உண்டு. அர்த்தத்துக்கு அந்த அளவு விசேஷமில்லை. உதாரணமாக, தேள் கொட்டு மந்திரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு அர்த்தம் என்று ஒன்றும் விசேஷமாக இராது. அர்த்தத்தைச் சொல்லக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனாலும் அந்த சப்தக் கோவையை ஜபித்தால், அதனால் ஆகாசத்தில் ஏற்படுகிற ஒலி அதிர்வுகளாலேயே (Vibration) அதாவது, அக்ஷரங்களின் சக்தியினாலேயே விஷம் இறங்கி விடுகிறது. ஒவ்வொரு விதமான சப்தத்துக்கு ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. 'ஆபிசாரம்' என்று பிறருக்குக் கெடுதல் செய்யக் கூட மந்திரம் இருக்கிறது. அந்த சப்தங்களுக்குக் கெடுதல் செய்யும் சக்தி இருக்கிறது. இவற்றில் எல்லாமே அக்ஷர சுத்தம், ஸ்வர சுத்தத்தில்தான் சக்தி. பில்லி, சூனியம் வைக்கிறவர்களின் பல்லைத் தட்டிவிடுவதுண்டு. ஏனென்றால் பல் போனால் சொல்லும் மாறுபடும். அவர்கள் ஜபிக்கிற மந்திரங்களில் சப்த தோஷம் உண்டாகும். அதனால் அவை பலன் தராமல் போகும். உச்சாரணம் சுத்தமாக இருந்தால்தான் அக்ஷரங்கள் பலன் தரும். சப்தங்களுக்கே இப்படி சக்தி இருப்பதை புரிந்து கொண்டோமானால், அப்புறம் எந்த மந்திரம் எந்த பாஷையில் இருக்கிறது, பாஷையை மாற்றலாமா என்ற யோசனைகள் எழும்பாது. திவஸ மந்திரத்தை இங்கிலீஷில் மொழி பெயர்க்கலாம், தமிழில் சொன்னால்தானே நம் அப்பாவுக்கு புரியும் என்றெல்லாம் கேட்காமலிருப்போம்.

எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலன்களைத் தருமோ, அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். இதை நம்பினால்தான் உண்டு. நம் காதுகளுக்கும் கேட்காதது ரிஷிகளுக்கும் கேட்குமா என்று கேட்கலாகாது. நமக்குத் தெரியாததைக் காண்கிற திவ்விய திருஷ்டி, நமக்குக் கேளாததைக் கேட்கும் திவ்விய சுரோத்தரம் எல்லாமே உண்டு. இப்போது நம் பார்வை, நம் கண்ணிலுள்ள லென்ஸைக் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஸென்ஸ் வேறுவிதமாக இருந்தால், நாம் பார்ப்பதெல்லாம் வேறு விதமாகத் தெரியும். யோக சாதனையினால் இந்த திவ்விய சக்திகளைப் பெற முடியும்.

வேதத்தில் இருப்பவற்றை நம் கண்ணாலும், காதாலும், யுக்தியாலும், புத்தியாலும் பரீட்சரிப்பது சரியல்ல. வாஸ்தவத்தில் நம் கண்ணுக்கும், காதுக்கும், புத்திக்கும், யுக்திக்கும் எட்டாததைச் சொல்லவே வேதம் இருக்கிறது. நமக்கு நேரில் தெரிவதை நாமே தெரிந்து கொள்கிறோம். அதற்கு வேதம் என்று ஒன்று வேண்டியதே இல்லை. எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி எட்டாதோ, அப்படிப்பட்ட பரம சத்தியங்களை திவ்விய சிருஷ்டி உள்ள முனிவர்கள் அறிந்து வேதமாகத் தந்திருக்கிறார்கள். அந்நிய தேச விவகாரங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அங்கிருந்து வருகிற பத்திரிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். உடனே நம்பி விடுகிறோம். லோகத்திலுள்ள கருவி எதனாலுமே தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக வேத மந்திரங்கள் என்ற பத்திரிக்கையை ரிஷிகள் தந்திருக்கிறார்கள்.

அவற்றை நம்பிக்கையின் மேல்தான் ஏற்க வேண்டும். கொஞ்சம் நம்பி ஏற்றுக் கொண்டால், தானே அதன் பலன் தெரிந்து, போகப்போக இதுவே சத்தியம் என்று நிச்சயமாக அறிந்து கொள்வோம்.

பிரத்யக்ஷமாக மந்திர சக்தியால் அங்கங்கே கொஞ்சம் இப்போதும் நடந்து வருகிறது. இதில் நல்லதைவிட கெட்டதுதான் இப்போது அதிகமாக இருக்கிறது—ஏவல், பில்லி, சூனியம் இது மாதிரி 'மாந்த்ரிகம்' என்றாலே பயப்படுகிற மாதிரி இருக்கிறது. ஆனால் இதிலிருந்தேகூட, கெட்டதைச் செய்ய ஒரு சில சப்தக் கூட்டங்களுக்கு சக்தி இருக்குமானால், நல்லதைச் செய்யவும் ஏன் இப்படிச் சில சப்தக் கூட்டங்களான மந்திரங்கள் இருக்கக்கூடாது என்று யோசித்துத் தெரிந்து கொள்ளலாம். நல்லதாகவும் அவ்வப்போது எங்கேயோ கேள்விப்படுகிறோம். 'வருண ஜபம் செய்தார்கள், மழை பெய்தது' என்று படிக்கிறோம். நம் ஊரிலேயே எப்போதாவது இந்த மாதிரி நேரில் பார்க்கிறோம்.

இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள்! குணமாகாமல் சாகிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா? மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது. யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ். ஸயன்ஸ் பரிசோதனை செய்கிற லாபரட்டரியில் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற ரூலை மீறினால் நிஷ்பலனாகும் அல்லது விபரீதமாகும். மின்சாரத்தில் வேலை செய்யும் போது, 'மரத்தில் நிற்கமாட்டேன்', 'ரப்பர் உறை (gloves) போட்டுக் கொள்ள மாட்டேன்' என்றால் என்ன ஆவது? அப்படித்தான், யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ் என்றால் அதன் விதிகளின்படி கேட்டுத்தான் ஆக வேண்டும். வருண ஜபம் பலிக்காத பல இடங்களில் நான் விசாரித்ததில் அலவண நியமம் அதாவது ஜபம் செய்கிறவர்கள் உப்பே சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற விதி—சரியாக அநுஷ்டிக்கப்படவில்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.

மந்திர மகிமையில் பட்ட மரம்கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில் பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். 'ஜம்பு' என்கிற வெண் நாவல் மரம்தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேசுவரம் என்று பெயர் இருக்கிறது. அங்கேயிருந்த ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டைதான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக்கொண்டிருந்த ஒரு சமயத்தில், கானாடுகாத்தான் செட்டியார்கள் திருப்பணி செய்தார்கள். அப்போது இந்தப் பட்ட மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள். மந்திர சக்தியால் அப்போழுதே அது துளிர்த்தது.

ஒவ்வொரு சப்தத்தால் ஒவ்வொரு விளைவு வெளி உலகில் உண்டாகிறது. ஆராய்ச்சியாளர்கள் சிவவிதமான சப்தங்களை ஸ்வரஸ்தானங்களில் அமைந்து ஓர் ஏரிக்குப் பக்கத்தில் திரும்பத் திரும்ப வாசித்தபோது, அதிலிருந்து உண்டான அதிர்வுகளால் (Vibration) ஜலத்தின் மேலே ஒளியானது தூள் தூளாகப் பிரசாசித்துக் கொண்டு, அப்புறம் அந்த ஒளித் தூள்கள் எல்லாம் (light particle) ஒழுங்கான வடிவத்தில் (specific shape) அமைந்தன. ஒவ்வொரு விதமான ஸ்வர வரிசைக்கும் இப்படி ஓர் ஒளி உருவம் உண்டாயிற்று. இந்த Scientific proof லிருந்து வேத மந்திர சப்தங்களால் தேவதா ரூபங்களின் தரிசனம் கிடைக்க முடியும் என்பதை நம்ப முடிகிறது.

ஒலியானது ஒளியாக மட்டும்தான் வெளி உலகில் மாறுகிறது என்றில்லை. அது வேறு பல விதங்களில் வெளியே வியாபித்துப் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வேத சப்தங்கள் வெளிச் சூழலில் (atmosphere) பரவிக் கொண்டிருப்பதாலேயே லோகத்தில் பரம மங்களம் உண்டாகும். அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது. சப்தம் மட்டுமில்லாமல், அதன் ஸ்வரஸ்தானத்துக்கும் சக்தி உண்டு. ஓர் ஒலியை எப்படிச் சொன்னாலும் பலன் தந்துவிடாது. சிலவற்றை உயர்த்த வேண்டும். சிலவற்றைத் தாழ்த்த வேண்டும். சிலவற்றைச் சமமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். வேதத்தைப் இப்படி மூன்று வித ஸ்வரங்களில் சொன்னாலே பலிதமாகும். இவற்றை உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். சப்தம், ஸ்வரம் இரண்டுமாகச் சேர்ந்து பிரபஞ்ச சக்திகளை நமக்கு அநுகூலமாக்கித் தருகின்றன.
- தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) வைதிக மதம்
--------------------------------------------------------------------------------------
சூக்‌ஷும சப்த மந்திரங்களின் ஸ்தூல வடிவங்களே யந்திரங்கள்
Subtle Sound as Mantra's Gross Forms are Yantras(Sath-Chakras7 in our body.

Pictures : Several Chakras - படம் : பல ச்க்கரங்கள்

No comments:

Post a Comment