Friday, August 10, 2018

ஆன அஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சு எழுத்துளே அடங்கலாவ உற்றதே.
                         - சிவவாக்கியர்
ந - மண் பூதம்
ம - நீர்
சி - நெறுப்பு
வா-வாயு
ய - ஆகாயம்
பஞ்ச பூதமே அனைத்தும்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட் கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து   போய்
வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

வெட்டவெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குக் பட்டயம் ஏதுக்கடி!
குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி
                       - குதம்பைச் சித்தர்


அணுமின் அணுவினை ஆதிபிரானை
அணுவில் அணுவினை ஆயிரம்
கூறிட்டணுவின் அணுவை அணுக
வல்லார்கட் கண்ட கணுவில்
அணுவை அணுகலாமே
                   - திருமூலர்


தன்மேனி நற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவமாய் நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாகந்
தன்மேனி தானா குந்நற்பரந் தானே!
                            - திருமந்திரம்

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே.
                    - திருஅருட்பா


அன்பெனும் பிடியுள் அகபடும் மலையே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பேனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
                       - திருஅருட்பா

வந்ததிலும் போனதிலும்
மனதை வைய்யேன்
வந்ததும் போனதும் வாசியாகும்
                            - வால்மீகி சித்தர்

சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்
சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதிசொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசிசோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்.


உச்சிக்கும் கீழாக நாவுக்கும் மேலாக வைத்த விளக்கும் எரியுதடி ,
அச்சுள்ள விளக்கு வாழையடி அதை அரியாமல் மனம் இருக்குதடி!

நந்த வனத்தில் ஒர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தானே ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.


Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 9884380229


No comments:

Post a Comment