Thursday, September 27, 2018

Knowing about your own Soul is first step for Eternality .

வணக்கம்
ஆத்மா சுயரூபம் எப்போது வெளிப் படுகிறது

மனம் அடங்கும் போதா? அல்லது மனம் விரிவு அடையும் போதா?

ஒவ்வொரு மனிதனின் மனம் அடங்கும் நேரம் அமைதி
மனம் விரிவு அடையும் நேரம் பிரபஞ்சத்தின் ஆற்றல் அதிகம் பிறக்கிறது

மனம் விரிவு அடையும் தருணம்
முக்காலமும் உணரப்படுகிறது

மனம் அடங்கும் நேரத்தில் தன்னைத்தானே
அறியச் செய்கிறது
இதில் முன் நடப்பவை பின் நடப்பவை அறியப் படுவது இல்லை

எப்போது மனம் முழுவதும் விரிவடையுதோ
அப்போது நாம்  யார் என்பதை உணர முடியும்

நாம் இங்கு இருந்து கொண்டு வேறு ஒரு இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என நடப்பதை யூகிப்பது மனம்தான்
அதை  உண்மை என்று ஏற்பதும் பொய் என்று மறுப்பதும் மனமே தான்

ஒரு காலத்தில் யூகத்தின் அடிப்படையில் வகுத்து கொண்டது தான் இன்று நாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டது

மனம் விரிவடைய விரிவடைய
நமக்கு பல விசயங்களில் தெளிவு பிறக்கிறது மனம் அடங்க அடங்க குழப்பமும் அடங்குகிறது

அப்படி விரிவு அடையும் மனம் நமக்கு பல
விதத்தில் தெளிவு தருகிறது
இந்த தெளிவே
நமது உடலில் இருந்து மனதை பிரிக்கவும்
சேர்க்கவும் உதவுகிறது
நாம் தியானத்தில் இருக்கையில் எவ்வளவு தெளிவு பெறுகிறதோ அவ்வளவு விரிவு அடைகிறது மனம்

இந்த விரிவே நாம் இந்த பிரபஞ்சத்தை உணர உதவுகிறது
மன ஆற்றலே மறுமையை உணர செய்கிறது
எத்தனை விரிவாக்கமோ அத்தனை அறிதல் --
Dr.V.Suresh.,PhD.
www.supremeholisticinstitute.com

No comments:

Post a Comment