Thursday, September 27, 2018

Eternality Secrets

www.supremeholisticinstitute.com
பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

 தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து  இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம்.விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அதுசாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல.இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க.-இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

நான் நிதானமாக சொன்னேன் இந்த கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.
மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.

இவற்றை கதையை அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும்.பொருள் அதுவாகவே விளங்கும்.

சரி.இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

பாற்கடல்-குண்டலினி சக்தி
மேருமலை-முதுகுத்தண்டு
வாசுகி பாம்பு-மூச்சுக்காற்று(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)
தேவ,அசுரர்-இடகலை,பிங்கலை(நாடி)
ஆமை-ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை
தொண்டைக்குழி-விசுக்தி
விஷ்னு-வாழ்வு
ஆலகாலவிஷம்-கபம்
அமுதம்-நித்ய வாழ்வு(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.
(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும்  தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது(நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின்  போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)

என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே-என்று.

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு)மேலும் சில உருவகங்களின் Decodings

ஒரே இறைவன்(இஸ்லாம்)-அத்வைதம்(Oneness)

சக்தி,சிவன்-துவைதம்(Duality)

பிதா,சுதன்,பரிசுத்த ஆவி-விசிஷ்டாதுவைதம்(கிறித்துவம்)
-உருவகம்

சும்மா இருந்தால் சிவம்(Static)
ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)
சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தி யின் உருவகம்

கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)
அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்

தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம்(அறிவியல் ஏற்றுக்கொண்டது)

சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்

முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,அதன் எதிர்பரிமாணம் மகாகாளி-உருவகம்

பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாதமனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்
-மனத்தின் உருவகம்

கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை(தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?
உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.

🌍Shiva Guru Vasi yogam ☀

No comments:

Post a Comment