Friday, September 28, 2018

Vasi yoga Meditation secrets

www.supremeholisticinstitute.com
ௐ சொல்லி, புருவ மத்தியில் கவனத்தைக் குவித்து, தவமிருந்து பழகுபவர்களுக்கான, ரூட் மேப் இந்தப் பதிவு ஆகும்!

டிரைவிங்,ரோடுகளில் செய்யும் போது, அந்த ரோட்டைப் பார்த்துதான் வண்டி ஓட்டுவோம்! வண்டியும் நேராகத் தடுமாறாமல் லாவகமாக ஓடும். கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பி ஒரு வினாடி வேடிக்கை பார்த்தாலும், வண்டி தன் நேர் போக்கிலிருந்து விலகி சிறிது அங்குமிங்குமாக அலம்பி, அதன் பின் நேராவதை நாம் எல்லோரும் அன்றாடம் அனுபவிப்பதுதான். யாராவது பின்னால் உட்கார்ந்திருந்தால்,  "நேராக ரோட்டப் பாத்து ஓட்டேம்ல" என்று கூறுவதையும் அனுபவப் பட்டிருக்கின்றோம்! அதேதான் தவத்தின் போதும்!

வண்டிக்கு, பார்த்து ஓட்ட ரோடு இருக்கிறது! தவத்தை எதைப் பார்த்து செய்ய? என்றால், அதற்கு ரோடு "முச்சுதான்"!

பாட்டிலில் புணலை வைத்து அதில் முதன் முதலாக எண்ணெயை ஊற்றும் போது, புணலின் சுவர் முழுவதும் நிறம்ப சொழ சொழவென ஊற்றுவோம்! நாட்கள் செல்லச் செல்ல, எண்ணெயை புணலில் படாமலே நேராக பாட்டிலுக்குள் சத்தமே வராமல் மெல்லிய நூலிழைப் போல ஊற்றி முடிக்க முடியும். அதே போல,

ஆரம்ப கட்ட சாதகர்கள், ஓம் ஊச்சாடனையின் போது, அந்த ௐ மும், மூச்சும் ஒன்றோடொன்று முட்டி மோதி, அசௌகரியத்தை உண்டு பண்ணுவதைக் கண்டு உற்சாகம் இழப்பர்! இந்த மோதல்களினால், முதுகு கழுத்துகளில் cramps உண்டாகி வலிக்கவும் செய்யும். அதற்காக, எழுந்து ஓடிறக் கூடாது! தினம் தினம் பயிற்சியை, செய்து வர வர, மூச்சிற்கும், ௐ மிற்கும் ஆன பரஸ்பர தொடர்பு புரிய வரும்! இரண்டும் முட்டாமல் மோதாமல் லாவகமாக தத்தமது ரூட்டை ஒன்றின் பின் ஒன்றாக அமைத்துக் கொள்ளும்! பாதி திறந்த கண் இமை சட சடக்காமல் இப்போது பாதி திறந்த நிலையிலேயே தன்னை தக்க வைத்துக் கொள்ளும். புருவ மத்தியில் வைத்த கவனமானது அங்கே ஒரு அழுத்த உணர்வைப் பதித்திருக்கும்! இவ்வளவும் நடந்தேறிய பிறகு உடல் இனி வலிக்காது. Cramps உருவாகாது. இப்போது உடல் ஒருவிதமான அனாயசமான சுகத்தில் திளைத்து ஆடாமல் அசையாமல், காற்றடிக்காத அறைக்குள்ளே வைத்த தீப சுடர் ஆடாமல் அசையாமல் வரைந்த ஓவியம் போல் சலமற்று இலவதைப் போல இலங்கும்!

இதோடு தவம் முடிந்ததென பாயை சுருட்டியவர்கள் நிறைய பேர் உண்டு!

ஆனால் இந்த நிலையானது, நாம் தவத்தை மேலும் இறைவனை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான பாதையில் இப்போதுதான் வைக்கப் பட்டிருக்கின்றோம் என்பதற்கான அறிகுறி ஆகும்!

இனி, முச்சிற்காச்சி, ௐமிற்காச்சி!

ௐ உச்சாடனை இப்போது சரியான இடைவெளிகளில் சரியான சந்தங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில்,

மூச்சின் உள்ளிழுப்பு மிகச் சன்னமாக மாறி, ஒரு நூல் அளவிற்குப் பருமன் குறைந்து, உள்ளே போய்க் கொண்டே இருக்கும். அதற்கு ஈடு தரும் விதமாக வயிறும் உப்பி உப்பி வெடிக்கும் அளவு பெரிதாகி வரும். அதைக் கண்டு பயந்து போய் ௐ சொலவதை நிறுத்தி விடாதீர்கள். உள்ளே சென்று கொண்டே இருந்த மூச்சு இப்போது நின்று விடும். வயிறு உப்பியே இருக்கும். இப்போதும் ௐ உச்சாடனையை நிறுத்தி விடாதீர்கள். அதை அதே லயத்தில் பதற்றமில்லாமல் செய்த வண்ணம் இருங்கள். இப்போது நின்ற மூச்சி அதுவாகவே வெளியேற ஆரம்பிக்கின்றது. அதே போல் சன்னமாகவும், நூலிழை போன்றும் வெளியேறிக் கொண்டேயும் இருக்கும். வயிறு முழுமையாக உள்முகமாக நெஞ்செலும்பிற்குள் ஒட்டி, வயிறு இருந்த இடம் பெரிய பள்ளமாகி விடும். இப்போதும் பயந்து விடாதீர்கள். ௐ மை விட்டுவிடக் கூடாது. முழு மூச்சும் வெளியேறியவுடன், ஒட்டிய வயிறுடன் உள்ள நிலை சிறிது நேரம் நிலைக்கும்! மீண்டும் மூச்சு உள்வாங்கலானது அதே மாதிரி ஆரம்பமாகிறது!

இந்த சமயத்தில், உங்கள் மீது எறும்பு ஏறி, கொசு உட்கார்ந்து கடிக்கலாம். சட்டை செய்து விடாதீர்கள்.

இந்த மூச்சின் நிலைதான் பள்ளம் மேடில்லாத ரோடு ஆகும். No additional to and fro traffic. நீங்க மட்டும்தான். இந்த ரோட்டில் அந்த ௐ என்னும் வண்டியை ஓட்டியபடி செல்லுங்கள், செல்லுங்கள்,சென்றபடி இருங்கள்!

ஒருநாள், ஒருசமயம்;

சுகமாகவும் இனபமாகவும் ரோட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், திடீரென நாலா பக்கமும் பிசிறி அடிக்கப் படுவீர்கள்! எங்கும், எல்லாத் திக்கும், அகண்டாகாரமாய் ஔியை மிஞ்சும் வேகத்தில் பரவி முடிந்து விடுவீர்கள்!

பாதி மூடியிருந்த கண்கள் அதுவாகவே முழுதும் திறந்து பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கும். இறுக மூடியிருந்த கைவிரல்கள் விரிந்து கொள்ளும். ஸ்தம்பித்த நீங்கள் இப்போது புரியத் தொடங்குகிறீர்கள்.

புரிந்தவுடன்....

சடேரென எழுந்து, திமுக்கு திக்கா, திமுக்கு திக்காவென குதித்து பரவசத்தில் ஆட ஆரம்பிக்கிறீர்கள். பக்கத்தில் கிடக்கும் சேர், மேஜைக்கெல்லாம் முத்தம்தான் போங்கள்!

ஜீவனாக இருந்த நீங்கள் இப்போது ஜீவன் முக்தனாக புரமோசன் பெற்று விட்டீர்கள்!

எங்கும் வியாபித்த நீங்கள், "இனி வியாபித்தது வியாபித்ததுதான்" திரும்பி, மீண்டும் உங்கள் உடலுக்குள் மட்டும் அடங்கி இருக்க முடியவே முடியாது!

ௐ தத் சத் ௐ !!

🌅Sri Aadhi Shiva Guru 🌏

No comments:

Post a Comment