Friday, August 10, 2018

TANTRA-தந்திரம்
----------------------------------------------
கபால தீட்சை (O) KAPALA DIKSHA
(((Macha Muni's Thirumanthiram800)))
----------------------------------------------
7.......ஹ்ரீம்.......6......ௐ......5.....அங்.....4....மங்....3...சிங்...2..வங்.1
7..........Hrim.........6.....Om.....5......Ang......4...Mang...3...Sing...2..Vang.1

மச்ச முனிவர் “மச்சமுனி திருமந்திரம்800” நூலில்
உள்ளது இந்த “கபால தீட்சை” தீட்சை முறை !!!!!!!

இதனை தன் நூலில் பின்வருமாறு
மச்சமுனி குறிப்பிடுகிறார்.

சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு
நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்
சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு
கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"
- மச்சமுனி -

மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று
வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு
சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்
பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"
- மச்சமுனி -

7- சஹஸ்ரபத்மம்
6 - சாதகரின் உச்சியில்
... "ஹ்ரீம்" என்ற மந்திரத்தினையும்,
5 - புருவ மத்தியில்
... "ஓம்" என்ற மந்திரத்தினையும்,
4 - கண்டத்தில் அதாவது தொண்டையில்
...."அங்" என்ற மந்திரத்தினையும்,
3 - மார்பில்
... "மங்" என்ற மந்திரத்தையும்,
2 - நாபியில்
..."சிங் வங்" என்ற மந்திரத்தையும்
1 - மூலாதாரம்

உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர்.
இதுவே கபால தீட்சை ஆகும்.

இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?,
அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

பொருந்திய தீட்சையைப் புனிதம தாக
வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு
திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்
இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"
- மச்சமுனி -

ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"
- மச்சமுனி -

மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால்
உணர்ந்து தினமும் தியானித்து வந்தால்
தியானிப்பவர் உடலானது கைலாசம் போல்
ஏகாந்தமாய் நிற்குமாம்.

இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன்
சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம்.

மேலும் தினமும் இந்த கபால தீட்சையை
மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில்,
தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன்
உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி

வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் மச்சமுனி !
_________________________________________________
7.......ஹ்ரீம்.......6......ௐ......5.....அங்.....4....மங்....3...சிங்...2..வங்.1
7..........Hrim.........6.....Om.....5......Ang......4...Mang...3...Sing...2..Vang.1
LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
---------------------------
AUM OM ௐ அஉம் :
---------------------------
ஓம்                                                                                                                 
பொதுவான வரிவடிவம் : ॐ ;
தேவநாகரி வரிவடிவம் :ओं அல்லது ओ३म् ;                                   
தமிழில் : ௐ என்பது இந்து சமயத்திலுள்ள                                                                                           
ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.                                 

இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு                                 
முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள்                                             
உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.

மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால்
உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால்
ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே
ஆடலன் ஆடலன்றோ"
- (மய விஞ்ஞானம்)

ஓம்கார உச்சரிப்பு பற்றி பதஞ்சலி முனிவர் :

ஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம்
ஓ+ம் = ஓம் om
’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால்,
’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்

ஓம் பற்றி உபநிடதங்கள் :

ஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.

ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

பகவத்கீதையில் ஓம் :

கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
பிரணவ மந்திரம்

ஓம் என்பதை பிரணவ மந்திரம்                                                           
என்று இந்துகள் சொல்லுகிறார்கள்.

பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள். அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது.

திருமந்திரத்தில் ஓம் :

ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.

சட்டைமுனி சூத்திரத்தில் ஓம் :

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.

சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம் :

ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ஞானவடிவத்தை உடையதோ, ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ, எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ, பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ, அழிவற்றதோ, எத்துடனும் சேர்க்கையற்றதோ, எங்கும் நிறைந்து உள்ளதோ, இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே நான்  ஓம் என்று கூறப்பட்டுள்ளது.                                       
(உபதேச ஸாஹஸ்ரி 10. 1).
--------------




LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
-----------------------------------------------------------------
UNIVERSE OF SOUND }ௐ{ சப்தப் ப்ரபஞ்சம் :
-----------------------------------------------------------------

LIFE LIGHT & SOUND -^- ஜீவ ஒளியும் ஒலியும்

அ என்றால் சூரியன்,
உ என்றால் இந்திரன்,
ம் என்றால் அக்னி.

எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம்.

பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின் காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான
ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது.

ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம்
மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த
உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது.

நாபியில் ‘அ’ எனத்தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம்,மணி, நாள், மாதம், ஆண்டு ஆகிய அருவ அளவைகளால் உணரலாம்.
இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற அருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும்.

குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும்.

செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது.

இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கினைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின்(தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்.

THE HUMAN HEARING RANGE - WHAT CAN YOU HEAR?

The human hearing range is a description of the pitches and               
loudness levels a person can hear before feeling discomfort.

There are a variety of sounds in our environment, ranging from faint sounds like birdsong and rustling leaves to louder sounds like music, yelling, and industrial noise. This human hearing range is called the audible range.

Loudness and pitch
The human hearing range depends on both the pitch of the sound – whether it is high or low – and the loudness of the sound. Pitch is measured in Hertz (Hz) and loudness is measured in decibels (dB).

For a person with normal hearing, when it comes to pitch the human hearing range starts low at about 20 Hz. That’s about the same as the lowest pedal on a pipe organ. On the other side of the human hearing range, the highest possible frequency heard without discomfort is 20,000Hz. While 20 to 20,000Hz forms the absolute borders of the human hearing range, our hearing is most sensitive in the 2000 - 5000 Hz frequency range.

As far as loudness is concerned, humans can typically hear starting at 0 dB. Sounds that are more than 85dB can be dangerous for your hearing in the case of prolonged exposure.

loudness levels
Surprisingly, there are sounds that even humans with the best hearing can’t hear. We can’t hear the sound of a dog whistle, but a dog can because dogs have a much large hearing range than humans do. Lower frequency sounds like the roar of a wind turbine are also out of the human hearing range and are often felt as vibrations rather than heard as sound.

Hearing ranges for people with hearing loss
When you have a hearing loss, your hearing range changes.
For most, a hearing loss will begin by affecting the upper pitches of the human hearing range. Birdsong, certain speech sounds, and instruments like flutes and piccolos are difficult to hear for most with hearing loss.

60 dB க்குமேல் கண்டிப்பாக கேட்பவர்களை அவஸ்த்தைப்படுத்தும்.120 dBல்காது காலி.

The human ear can respond to minute pressure variations in the air if they are in the audible frequency range, roughly 20 Hz - 20 kHz.

It is capable of detecting pressure variations of less than one billionth of atmospheric pressure... An interesting sensation occurs when a listener is presented with exactly the same sounds to both ears, such as listening to monaural sound through headphones.

The brain concludes that the sound is coming
from the center of the listener's head !.}O{}O{

இப்படி ஒலி பெறுக்கியின் மூலம்
மந்திரங்கள் சொல்லப்படும்போது
அடக்கிவசித்தால்; மற்றவர்களைத்
துன்புறுத்தாமல், வேண்டுவோர்கள்
மட்டும் பயனடையலாம்.

மற்றபடி,
டப்பாங் குத்து கானா செண்ட மேளம் 
போன்றவற்றைத் தவிர்த்தல் நலமே.

ஒலியின் தன்மை frequency :

கீழுள்ள கானொளியை மேல் ஸ்தாயி போகப்போகச்
சப்தத்தை குறைத்துக்கொண்டேபோய்க் கேளுங்கள்!
20Hz to 20kHz (Human Audio Spectrum) - YouTube
Video for audible range of sound▶ 2:24
https://www.youtube.com/watch?v=qNf9nzvnd1k

For further details on this subject of Life Light & Sound
UNIVERSE OF SOUND }ௐ{ சப்தப் ப்ரபஞ்சம் :

LIFE LIGHT & SOUND
जीवन प्रकाश और ध्वनि
ஜீவ ஒளியும் ஒலியும்

Every thing is really unreal (memory)
& yet un-really real (events) !

--------------------------------
PICTURES - படங்கள் :
--------------------------------
1
Examples of the decibel levels of typical sounds ()}{
சகஜமான சப்தங்களின் ஒலி உதாரண அளவுகோல்
2
A U m Red - அஉம் சிவப்பு
3
Nada Bindu AUM - நாதபிந்து அஉம்
4
Nada Bindu Red -  நாதபிந்து சிவப்பு


LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
-------------------------------------------------------
WHAT HAPPENS WHEN YOU SAY 'OM' :
-------------------------------------------------------
Hans Jenny and Cymatics - The Study of Wave Phenomena :

In the 1960s and '70s Swiss engineer and medical doctor Hans Jenny performed experiments using sound frequencies on various materials such as water, sand, dust, liquid plastic and milk.
Dr Jenny placed the material on a metal plate attached to a crystal oscillator which was controlled by a frequency generator capable of producing a wide range of vibrations. He then filmed and photographed what happened on the plate when the sound "om" was played into the sand
Hans Jenny (1904 - 1972 In the 1960s and '70s Swiss engineer and medical doctor Hans Jenny performed experiments using sound frequencies on various materials such as water, sand, dust, liquid plastic and milk.
Dr Jenny placed the material on a metal plate attached to a crystal oscillator which was controlled by a frequency generator capable of producing a wide range of vibrations. He then filmed and photographed what happened on the plate.
He coined the term Cymatics (the study of wave-form phenomena), which is derived from the Greek 'kyma' meaning 'wave', and 'ta kymatica' meaning 'matters pertaining to waves'.
The first two images are of water.
The higher the frequency, the more complex the pattern.
The vibrations are strongest in the dark areas within the material on the plate. For example in sand pattern 1, the sand falls into those areas where there is little or no vibrations, thus making the unique patterns shown.
These next images were taken from moving film. Please remember that the substance is constantly oscillating and not in a static state. It is interesting to note that even when the plate was tilted the material would not fall off but would continue to oscillate just as before - seemingly defying gravity. When the frequency was shut off the material would immediately fall to the floor.

Dr Jenny invented a machine called a Tonoscope which allowed a human voice to vibrate the plate directly. He had a voice sing 'OM' into a microphone and the result can be seen in mandala image 1.

Incidentally, regarding the sand paintings of the Navajo Indian - there was a time in the distant past, so legend tells us, when the Navajo shaman made beautiful pictures in the sand merely by speaking to it.

Below is a picture of the Sri Yantra (mandala image 2). This is probably one of the most famous mandalas. You can find it in thousands of temples in India and the Far East. This is the pattern that the 'OM' is said to represent. Or rather, this is the image that the ancient Rishis envisioned when meditating on the 'OM'.

PICTURE :
'OM' into a microphone & the result seen in (mandala image 1)
Sri Yantra (mandala image 2)
Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 9884380229
LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
--------------------------------------------------------------------------------------
LIFE LIGHT & SOUND (OM - ஓம் ) ஜீவ ஒளியும் ஒலியும்
}} जीवन प्रकाश और ध्वनि ( ॐ - ௐ) Jīvana prakāśa aur dhvani {{
--------------------------------------------------------------------------------------
Omkara (ओंकार, oṃkāra),aumkara (औंकार, auṃkāra),& pranava (प्रणव, praṇava).

Om (or Auṃ [ə̃ũ], Sanskrit: ॐ) is a sacred sound and a spiritual icon in Dharmic religions. It is also a mantra in Hinduism, Buddhism and Jainism. In Hinduism, Om is a spiritual symbol (pratima) referring to Atman (soul, self within) and Brahman (ultimate reality, entirety of the universe, truth, divine, supreme spirit, cosmic principles, knowledge).

The syllable is one of the most important symbols in Hinduism, and is often found at the beginning and the end of chapters in the Vedas, the Upanishads, and other Hindu texts. It is a sacred spiritual incantation made before and during the recitation of spiritual texts, during puja and private prayers, in ceremonies of rites of passages (sanskara) such as weddings, and sometimes during meditative and spiritual activities such as Yoga.

Om is part of the iconography found in ancient and medieval era temples, monasteries and spiritual retreats in Hinduism, Buddhism and Jainism. A related symbol Ik Onkar is also found in Sikhism. The symbol has a spiritual meaning in all Indian religions, but the meaning and connotations of Om vary between the diverse schools within and across the various traditions.

The syllable is also referred to as omkara (ओंकार, oṃkāra), aumkara (औंकार, auṃkāra), and pranava (प्रणव, praṇava).

Vedic literature
The syllable "Om" is described with various meanings in the Vedas and different early Upanishads.The meanings include "the sacred sound, the Yes!, the Vedas, the Udgitha (song of the universe), the infinite, the all encompassing, the whole world, the truth, the ultimate reality, the finest essence, the cause of the Universe, the essence of life, the Brahman, the Atman, the vehicle of deepest knowledge, and Self-knowledge".

Vedas
The chapters in Vedas, and numerous hymns, chants and benedictions therein use the syllable Om.The Gayatri mantra from the Rig Veda, for example, begins with Om. The mantra is extracted from the 10th verse of Hymn 62 in Book III of the Rig Veda. These recitations continue to be in use, and major incantations and ceremonial functions begin and end with Om.

ॐ भूर्भुवस्व: |
तत्सवितुर्वरेण्यम् |
भर्गो देवस्य धीमहि |
धियो यो न: प्रचोदयात् ||

Om. Earth, atmosphere, heaven.
Let us think on that desirable splendour
of Savitr, the Inspirer. May he stimulate
us to insightful thoughts.

—Rig Veda III.62.10, Translated by Julius Lipner]

The word which all the Vedas proclaim,
That which is expressed in every Tapas (penance, austerity, meditation),
That for which they live the life of a Brahmacharin,
Understand that word in its essence: Om! that is the word.
Yes, this syllable is Brahman,
This syllable is the highest.
He who knows that syllable,
Whatever he desires, is his.

—Katha Upanishad, 1.2.15-1.2.16

The Epics
The Bhagavad Gita, in the Epic Mahabharata, mentions the meaning and significance of Om in several verses. For example, Fowler notes that verse 9.17 of the Bhagavad Gita synthesizes the competing dualistic and monist streams of thought in Hinduism, by using "Om which is the symbol for the indescribable, impersonal Brahman".

I am the Father of this world, Mother, Ordainer, Grandfather, the Thing to be known, the Purifier, the syllable Om, Rik, Saman and also Yajus.

—Krishna to Arjuna, Bhagavad Gita 9.17,

The significance of the sacred syllable in the Hindu traditions, is similarly highlighted in various of its verses, such as verse 17.24 where the importance of Om during prayers, charity and meditative practices is explained as follows,

Therefore, uttering Om, the acts of yajna (fire ritual), dana (charity) and tapas (austerity) as enjoined in the scriptures, are always begun by those who study the Brahman.

—Bhagavad Gita 17.24,

Yoga Sutra
The aphoristic verse 1.27 of Pantanjali's Yogasutra
links Om to Yoga practice, as follows,

तस्य वाचकः प्रणवः ॥२७॥

His word is Om.

—Yogasutra 1.27,
------------------------------------------------------------------
ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும்,
அது ஒளிவடிவமாகவும் இருக்கும் ! ...ௐ
------------------------------------------------------------------
ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும்
மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி
உள் ஞானத்தை எழுப்பும் எனவும்,
அது ஒளிவடிவமாகவும் இருக்கும்
என்றும் கூறப்பட்டுளது.

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

ஓம்கார உச்சரிப்பு பற்றி
பதஞ்சலி முனிவர்
ஓ+ம் = ஓம் om

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும்,
‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும்
இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும்,
மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்

ஓம் பற்றி உபநிடதங்கள் :

ஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

பகவத்கீதையில் ஓம்
கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."

பிரணவ மந்திரம்
ஓம் என்பதை பிரணவ மந்திரம்.
பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு
முன் எங்கும் நிரம்பியிருந்தது.
அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும்.
அ என்பது முதல்வனான சிவனையும்,
உ என்பது உமையையும் குறிப்பது.
அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும்
ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன.

திருமந்திரத்தில் ஓம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.

சட்டைமுனி சூத்திரத்தில் ஓம்
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம் :
--------------------------------------------------------------------------------
ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார்.
எது ஞானவடிவத்தை உடையதோ,
ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,
எல்லாவற்றிற்கும் மேலானதோ,
எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ, பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ, அழிவற்றதோ,. எத்துடனும் சேர்க்கையற்றதோ,
எங்கும் நிறைந்து உள்ளதோ,
இரண்டற்றதோ,
எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ,
அதுவே நான் ` ஓம் என்று கூறப்பட்டுள்ளது.
(உபதேச ஸாஹஸ்ரி 10.1).
----------------
படங்கள் :
----------------
1 - நாதபிந்து சிவப்பு
2 - A U m Red
3 - ஒகார வடிவம்
4 - Nada Bindu AUM
www.supremeholisticinstitute.com
Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 98843 80229


Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 98843 80229
www.supremeholisticinstitute.com
TANTRA-தந்திரம்
-------------------------------------------------------------
SEVEN CHAKRAS सात चक्र ஏழு சக்கரங்கள் :
-------------------------------------------------------------
} பூரண மாலை -^- பட்டினத்தார் {
POORANA MALAI - PATTINATHAAR

குறள் வெண்செந்துறை 
}KURAL VENSENTHURAI{

1.மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!

2. உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!

3. நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!

4. உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!

5. விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!

6. நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!

7. நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!

8. உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!

9. மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே!

10. இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே!

11. ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!

12. மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே!

(இடையில் 13 முதல் 99 வரை மேலும் 87 பாடல்கள் உள்ளன)

100. நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே!

101. முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே!

102. பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே!
பூரண மாலை - பட்டினத்தார் : குறள் வெண்செந்துறை

--------------------------------------------
ஆதாரங்கள் 7 சிறு விளக்கம் :
--------------------------------------------

1 . மூலாதாரம் :
- குதத்துக்கும் குய்யத்துக்கும் மத்தியில் - திரிகோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் ,தேவி வல்லபை.

2 . சுவாதிஷ்டானம் :
- முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி.

3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி

4 . அனாஹதம் :
- ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி.

5 . விசுத்தி :
- கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் ,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.

6 . ஆக்ஞா :
- முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம்,
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி.

7. சகஸ்ராரம்(ஸஹஸ்ர பத்மம்) :
- சிரசில் உள்ள குவிந்த 1000 இதழ் தாமரை (மூளைப் பகுதி)
இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பரப்ரஹ்மம், தேவி பராசக்தி.

படம் :ஆதாரங்கள் 7

#வேள்விதானம்தவம்

தேவர்கள் பிராமணர் கள்
குருமார்கள் ஞானிகள்
இவர்களை போற்றுவதும்
தூய்மை நேர்மை பிரம்மச்சரியம்
கொல்லாமை இவைகள் உடலால்
செய்யப்படுவதும் #தவமெனப்படும்.

பிறர்மனத்தைப் புண்படுத்தாத தும்
உண்மையானதும் இனிமையானதும்
நன்மையளிப்பதுமான வார்த்தை களைப்
பேசுவது  வேதம் ஓதுவது ஆகியவை
வாக்கினால் செய்யப்படுவதும்
                     #தவமாகும்.

மன அமைதி மகிழ்ச்சி மெளனம்
மன அடக்கம் தூய எண்ணம் இவை
                    #மனத்தவம்மாகும்.

இந்த முன்று வகைத் தவங்களையும்
பயனைக் கருதாமல் ஈடுபாட்டுடன்
செய்துவந்தால் அது #சாத்வீகமானதவம்
எனப்படும்.

சொந்த நலனுக்காக வும்
பெருமைக்காகவும் போற்றுதலுக்காகவும்
செய்யப்படும் பகட்டுத்தவம்
#ராஜஸதவமாகும்.அதுஉறுதியற்றது
நீடிக்காது.

அறியாமையினால் தம்மைவருத்தித்கொண்டோ அல்லது
பிறரைத் துன்புறுத்தி யோ செய்யப்படுகின்ற தவம் #தாமஸதவம்
எனப்படும்.

தக்க இடத்தில் காலம் அறிந்து
தன்கடமையெனக்கருதி
பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல்
#பாத்திரமறிந்து தானம் செய்வது
          #ஸாத்விகதானம் ஆகும்.

கைமாறு கருதி அல்லது பலனைகருதி
அல்லது வருத்தத்துடன் கொடுத்தாலும்
அது #ராஜஸதானம் ஆகும்.

தகாத காலத்தில் தகுதியற்றவர்களுக்கு
தகாத இடத்தில் தானம் கொடுப்பதும்
மரியாதை இன்றியோ இகழ்ச்சியுடனோ
கொடுக்கப்படும் தானமும்
       #தாமஸதானம் எனப்படும்.

பிரம்மம்  "ஓம்"
                 
                  "தத்"

                  "ஸத்"
என்று முன்று பெயர்களைக் கொண்டது.
அதனால் பிராம்மணங்கள். வேதங்கள்
வேள்வி களும் வகுக்கப்பட்டன.

வேதம் அறிந்தவர்கள் வேதவிதிப்படி
செய்யும் வேள்வி.
#தானம்
#தவம் இவற்றைச் செய்யும்பொழுது
  #ஓம் என்று சொல்லி தான்
தொடங்கவேண்டும்.

பலனைவிரும்பமால் #வீடுபேற்றை
விரும்புபவர்கள் செய்யும் வேள்வி
தானம் தவம் இவற்றை #தத்
என்று சொல்லி தொடங்கவேண்டும்.

"ஸத்" என்ற சொல் உண்மை என்ற
பொருளிலும் நன்மை என்ற பொருளிலும்
உச்சரிக்கப்படுகிறது.
மங்கல காரியங்களிலும். #ஸத் என்றசொல் பயன்படுத்தப்படுகிறது.

வேள்வி தவம் தானம் இவற்றின்
நிலைத்த தன்மையை யும் #ஸத்
என்று சொல்லப்படுகிறது
சிரத்தையின்றி செய்யப்படும்
வேள்வி  கொடுக்கப்படும் தானம்
பின்பற்றப்படும் தவம் முதலிய
செயல்கள் #அஸத் எனப்படும்.
#அஸத்
காரியங்களுக்காக பலம்
இம்மையிலும் ஏற்படாது.
மறுமையிலும் ஏற்படாது.

சிவ சிவ